தமிழகம்

சசிகலாவுக்கு வரவேற்பு பேரணி நடத்த மனு; அனுமதி மறுத்த காவல்துறை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில்  வரும் பிப்.7 ஆம் தேதி சசிகலா தமிழகம் வருவார் என கூறிருந்த நிலையில் அவர் வரும் தேதி மாற்றப்பட்டு  பிப். 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழகம் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து சசிகலா வருகையை ஒட்டி, சென்னையில் போரூர் முதல் வரவேற்பு பேரணி நடத்த அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் காவல்துறையில் அனுமதி கேட்டிருந்தார். மனுவில் தெளிவான தகவல் இல்லை என்பதால், காவல்துறை தரப்பில் சசிகலா வரவேற்பு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மனுவில் தெளிவான தகவல் இல்லை என்பதால் பேரணிக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Share
ALSO READ  தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ரூ.4.81 கோடி செலவு என தகவல்..

Shanthi

உயிரைக் காத்த பெண் காவல் ஆய்வாளருக்கு சல்யூட் – கமல்ஹாசன்

naveen santhakumar

இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம்..

Shanthi