உலகம்

53 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பர்ஸ் ஒன்று மீண்டும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

1960 களில் அண்டார்டிகாவில் வானிலை ஆய்வாளராக பணியாற்றிய சான் டியாகோவை சேர்ந்த 91 வயதான நபருக்கு உலகின் தென் எல்லையில் காணாமல், போன வாலெட், 53 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் கிடைத்துள்ளது.

அமெரிக்க கடற்படை வானிலை ஆய்வாளர் பால் கிரிஷாம் 1967-ம் ஆண்டில் அண்டார்டிகா கண்டத்தில் வானிலை நிலவரங்களை கண்காணிக்க அங்கு அவர் ரோஸ் தீவில் ஒரு அறிவியல் நிலையம் மற்றும் விமான நிலையத்திற்கு வானிலை முன்னறிவிப்பாளராக ஒரு வருடம் பணியாற்றினார். கிட்டதட்ட, 13 மாதங்களுக்குப் பிறகு, அவர் கலிபோர்னியாவுக்குத் திரும்பியபோது, ​​அவர் தனது பணப்பையை தவறவிட்டார்.

மெக்முர்டோ நிலையத்தில் ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டபோது இரண்டு வாலெட்கள் ஒரு லாக்கரில் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வாலட்டில் அவரது கடற்படை அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், அணு, உயிரியல் மற்றும் ரசாயன தாக்குதலின் போது என்ன செய்வது என்பது குறித்த குறிப்பு அட்டை, ஒரு பீர் ரேஷன் பஞ்ச் கார்டு, வரி அறிக்கை மற்றும் அவரது மனைவிக்கு Money Order அனுப்பிய ரசீதுகள் ஆகியவை இருந்தன.

ALSO READ  இதுவரை கொரோனா வைரஸ் பிடியில் சிக்காத உலகின் மிகச்சிறிய நாடுகள்....

லாப நோக்கற்ற அறக்கட்டளையைச் சேர்ந்த அமெரிக்க விமானப்படை வீரரான மெக்கீ, இதன் உரிமையாளர்களைக் கண்டுபிடிப்பதற்காக அமெரிக்க கடற்படை வானிலை சேவை சங்கத்தை அணுகினார். நல்லவேளையாக க்ரிஷாம், இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளார், இது மீண்டும் இணைவதற்கு உதவியது.

​​மேலும், முன்பு அண்டார்டிகாவில் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்டீபன் டெகாடோவும் வாலெட் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட உதவியாக இருந்தார்.அண்டார்டிகாவில் வாலெட்டை இழந்தது சரியாக நினைவில்லை, ஆனால் அதனை இத்தனை முயற்சிகள் செய்து திருப்பி அளித்தவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றார் கிரிஷாம்.

ALSO READ  மருத்துவமனையிலிருந்து மாயமான சிறுமி..

இந்த வாலெட் அவர்களுடைய பழைய கால நினைவுகளை சுமந்துள்ள ஒரு பொக்கிஷமாகும். தவிர ஒரு முன்னாள் கடற்படை வீரருக்கு தூங்குவதற்கு கடமைப்பட்டுள்ளேன் என்றார் மெக்கீ.உண்மைதான் அந்த வாலெட் கிரிஷாமை மீண்டும் 53 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று அவரது அந்த 13 மாத ஆராய்ச்சியின் நினைவுகளில் ஆழ்த்தும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க நாட்டின் துணை அதிபர் கமலாஹாரிஸ் வருகைக்காக இந்திய மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் – பிரதமர் மோடி

News Editor

மல்யுத்த வீரர் ஸ்டோன் கோல்டு இன் முகத்தோடு ரன்வீர் சிங்கின் முகத்தை மார்பிங் செய்த மல்யுத்த வீரர் ஜான் சீனா… 

naveen santhakumar