விளையாட்டு

ஆஸ்திரேலியாவுடன் முதல் டெஸ்ட் போட்டி: 24 ஆண்டுகால தோல்விக்கு பழி தீர்க்குமா பாகிஸ்தான்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆஸ்திரேலியாவுடன் முதல் டெஸ்ட் போட்டி: 24 ஆண்டுகால தோல்விக்கு பழி தீர்க்குமா பாகிஸ்தான்?

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பன் நகரில் உள்ள காபா மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று அதிகாலை தொடங்குகிறது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஒரேயொரு முறை மட்டும் தொடரை சமன் செய்துள்ளது. மேலும் 1995 ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்த அணி வெற்றியை பதிவு செய்யவில்லை. கடைசியாக 2016-17ம் ஆண்டில் நடைபெற்ற தொடரில் கூட பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

ALSO READ  31 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு நேர்ந்த சோகம்

பாகிஸ்தான் அணியின் 24 ஆண்டுகால சோதனை வரலாற்றை மாற்றி எழுதுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் இம்முறை பாகிஸ்தானின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள அசார் அலி, பாபர் அசாம், பயிற்சி ஆட்டங்களில் இரண்டு சதம் அடித்த முகமது ஷபிக் ஆகியோரை அந்த அணி நிர்வாகம் பெரிதும் நம்பியுள்ளது.

ALSO READ  இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானி கைது..

அதேசமயம் ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை ஆஷஸ் தொடருக்கு பிறகு முழு பலத்துடன் களமிறங்குகிறது. அந்த அணியின் ஸ்மித், வார்னர் ஆகியோர் ஓராண்டு தடைக்குப் பின்னர் சொந்த மண்ணில் களமிறங்குகின்றனர். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அந்த அணி வலுவாக உள்ளது.

மேலும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை ரன் குவிக்க விடாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக கட்டுப்படுத்தினர். இதனால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“எதிர்பார்ப்புக்கும் நடைமுறைக்கும் இடையிலான வாழ்க்கை”- 10 திருமண நாள் குறித்து சானியா மிர்சா…

naveen santhakumar

2020ம் ஆண்டில் விராட் கோலிக்காக காத்திருக்கும் மற்றொரு சாதனை

Admin

பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸி. அணி வெற்றி – தொடரை கைப்பற்றி அசத்தல்

Admin