இந்தியா

இரயில் கட்டணம் அதிகரிப்பு; அதிர்ச்சியில் மக்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் அணைத்து துறைகளும் மக்களும் பெருதும் பாதிக்கப்பட்டனர். அதனையடுத்து கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 


அதனால் தற்போது இந்தியாவில் ரயில் சேவை பழைய நிலைக்குத் திருப்பி வருகிறது. இந்தநிலையில் குறைந்த தூரம் இயங்கும் பயணிகள் ரயில்களின் கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால், பயணிகள் அதிர்ச்சியடைந்ததுடன், தங்களின் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். 

Piyush goyal Minister of railway

இந்தநிலையில் குறைந்த தூர பயணிகள் இரயில்களின் கட்டண உயர்வு குறித்து, இரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கட்டண உயர்வு குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதிலிருந்து மக்களைத் தடுக்கும் பொருட்டு, குறைந்த தூர ரயில்களில் சற்று அதிகமான கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவல் இன்னும் இருக்கிறது. இந்த சற்று அதிக கட்டணமானது, ரயில்களில் கூட்டம் வருவதைத் தடுக்கவும், கரோனா பரவுவதைத் தடுக்கவும் ரயில்வேயால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகப் பார்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

ALSO READ  தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிப்பா...? முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை !

தேவையற்ற பயணங்களைத் தடுப்பதற்காக, ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது, ரயில் பயணிகளுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

61 மாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து – 19ஆவது மாடியில் இருந்து குதித்த நபர் !

naveen santhakumar

இளைஞரை உயிரோடு மரத்தில் கட்டி வைத்து எரித்த பெண்ணின் குடும்பத்தினர்…

naveen santhakumar

மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள்; நாடு முழுவதும் தலைவர்கள் மரியாதை..!

Admin