சினிமா

“கே.ஜி.எஃப்” பிரபலங்களுடன் கைகோர்த்த விஷ்ணு விஷால் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும்  விஷ்ணு விஷால் தற்போது  இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் எப்.ஐ.ஆர். படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு  மஞ்சிமா மோகன், கௌதம் மேனன் உள்ளிட்டோர்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. 

இதனையடுத்து நடிகர் விஷ்ணு விஷால் ‘மோகன் தாஸ்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை முரளி கார்த்திக் இயக்குகிறார். இவர், ‘களவு’ படத்தின் இயக்குநர் ஆவார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். 


இந்நிலையில், படத்தின் சண்டைக்காட்சி இயக்குநர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மோகன்தாஸ் படத்திற்கான சண்டைக்காட்சி இயக்குநராக அன்பறிவு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இரட்டையர்களான இவர்கள், ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’ உள்ளிட்ட பட வெற்றிப்படங்களில் சண்டைக்காட்சி இயக்குநராகப் பணியாற்றியுள்ளனர். இவர்கள், கே.ஜி.எஃப் சேப்டர் 1 படத்திற்காக சிறந்த சண்டைக்காட்சி இயக்குநருக்கான தேசிய விருதினை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் படக்குழு, விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


Share
ALSO READ  அண்ணாத்த பட ஷூட்டிங் எப்போது...தேதி அறிவித்த படக்குழு...!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஸ்வீட் சர்ப்ரைஸ்… “ராஜா ராணி” ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடிக்கு என்ன குழந்தை தெரியுமா???

naveen santhakumar

மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் பிரியங்கா மோகன்!

News Editor

கதாநாயகனாக அவதாரமெடுக்கும் இயக்குனர் பிரபு சாலமனின் புதல்வன் :

Shobika