சினிமா

கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்; ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிட தயாரான படக்குழு ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அஜித், ஹெச்.வினோத், இவர்கள் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வலிமை. இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் போனிகபூர்  தயாரித்து வருகிறார்.  மேலும் இவர்கள்  கூட்டணியில் “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் மீண்டும் இவர்கள் கூட்டணி இணைந்துள்ளதால் வலிமை படத்தின் மீது கூடுதல் எதிர்பார்புகள் எழுந்துள்ளது. 


ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் ‘வலிமை’என்பதைத் தவிர படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகளை முடித்துள்ளது படக்குழு.  இதனால் அதிருப்தி அடைந்த அஜித் ரசிகர்கள் முதலமைச்சர் முதல் பாரத பிரதமர் வரை அனைவரிடமும் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு இணையத்தை தெறிக்கவிட்டனர்.

இந்நிலையில் நீண்ட காத்திருப்பிற்க்கு  பிறகு வலிமை படத்தின் அப்டேட்டை போனி கபூர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அஜித் குமார் அவர்களின் 50 பிறந்தநாளை முன்னிட்டு மே 1 ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் விளம்பரம் தொடர்பான பணிகளும் தொடங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை அறிந்த ரசிகர்கள் தற்போது இருந்தே கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ALSO READ  விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கிய மத்திய அரசு...!

#valimai #ajith #thala #boneykappor #tamilcinema #tamilnadu #cinema #tamilmovie #cinematrending #Hvinoth #ajithukumar #valimai #valimaiupdate #balimaifirstlook #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘ஒளியாய் வாழ்வாய் இனி நீ’ கே.வி.ஆனந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் !

News Editor

நான் வாழ விரும்பவில்லை – யாஷிகா ஆனந்த் உருக்கம்

naveen santhakumar

உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன்!  

News Editor