சினிமா

நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

அண்மையில் நடிகர் மாதவன், அமீர்கான், நடிகை வைபவி, கவுரி கிஷான் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,  “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்காக தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவ விதிமுறைகளையும் கடைபிடிக்கிறேன். விரைவில் குணமடைந்து திரும்புவேன். எனக்கு ஆதரவும் அன்பும் காட்டியவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினருக்கும் நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், முகக் கவசம் அணியுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை..! 

நடிகை நிவேதா தாமஸ் தமிழில் நடிகர் விஜய், ரஜினி,கமல் ஆகிய முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

#Bollywood #madhavan #Mumbai #Maharashtra #Cinema #Cinenews #CinemaTrending #tamilThisai CoronaPositive #covidTest #CoronaVirus #GouriGkishan #Master #vijay #Vijaysethupathy #NivethaThomas


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தெலுங்கு நடிகர் ராஜசேகரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை:

naveen santhakumar

ராஷ்மிகாவிற்கு கூகுள் சூட்டிய மகுடம்:

naveen santhakumar

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு – த்ரிஷா நடித்துள்ள ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம்…

naveen santhakumar