சினிமா

யோகி பாபுவை புகழ்ந்த ஐபிஎல் வீரர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

யோகிபாபு தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வருகிறார். இவர் அஜித், விஜய், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவர் கதாநாயகனாக நடித்த மண்டேலா படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் மாடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். பாலாஜி மோகன் தயாரிப்பில் நேரடியாக டி.வியில் வெளியான படம் நடப்பு அரசியலை பேசியுள்ளது. 

ALSO READ  ஜப்பானில் தனிமையை போக்க தனி அமைச்சர் நியமனம் !

இப்படத்தில் நடிகர் யோகிபாபு சலூன் கடைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.  பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினரை வாழ்த்தி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்கள். தற்போது ‘மண்டேலா’ படத்தை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பாராட்டியுள்ளார். வீடியோ கால் மூலமாக யோகி பாபுவிடம் பேசி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீவத்ஸ் கோசமி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,”சில நாட்களுக்கு முன் நெட்ஃபிளிக்ஸில் ‘மண்டேலா’ திரைப்படம் பார்த்தேன். நடிகர்கள் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன். குறிப்பாக யோகி பாபுவின் நடிப்பு. என்ன ஒரு நடிகர், என்ன ஒரு கதை. அவர் நடராஜனின் நண்பர் என்பது தெரிந்தது. வீடியோ கால் மூலம் என்னை யோகி பாபுவிடம் பேசவைத்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தேசிய விருது பெற்ற கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு !

News Editor

நடிகர் யோகி பாபுவுக்கு குலதெய்வ கோவிலில் திடீர் திருமணம்

Admin

“பிசாசு 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 

News Editor