இந்தியா

ஒரே நாளில் 39.69 கி.மீ. சாலை அமைத்து சாதனை…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 39.69 கி.மீ. சாலை அமைத்து சாதனை படைத்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் சாலை போடும் பணிகள் நடந்து வந்தது. இதில் அவர்கள் 24 மணி நேரத்தில் 39.69 கி.மீ. தூரம் சாலை போட்டு சாதனை படைத்து உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவான் கூறியுள்ளார்.

ALSO READ  பிரசவத்திற்கு முதல்நாளில் கொரோனாவை கண்டறியும் கருவியை கண்டுபிடித்த பெண்மணி.....


இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்:-

சத்தாரா மாவட்டத்தில் பால்தன் முதல் மகாசுர்னே வரை 39.69 கி.மீ. தூரத்துக்கு கான்கிரீட் சாலை 24 மணி நேரத்தில் போடப்பட்டு உள்ளது. இது மாநில பொதுப்பணித்துறையினரின் சாதனையாகும். மேலும், இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

ALSO READ  நாசிக் டூ திருவனந்தபுரம்: 74 டயர்கள் நாள் ஒன்றுக்கு 5 கி.மீ என 1 வருடம் பயணித்த பிரம்மாண்ட டிரக்!... 

அமைச்சர் சவான் இந்த சாதனை படைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளார். 

மாநில பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சாலை அமைக்கும் பணி கடந்த ஞாயிறு காலை 7 மணிக்கு தொடங்கி, திங்கட்கிழமை காலை 7 மணிக்கு முடிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

News Editor

முதல்வர் மு.க.ஸ்டாலினை கவலையில் ஆழ்த்திய பிரபலத்தின் மரணம்!

naveen santhakumar

பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கத்தை ஏற்க மறுத்த இஸ்லாமிய மாணவி

Admin