இந்தியா

50 ஆயிரம் கோடியில் 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்- பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

இந்தியாவின் கடற்படையை மேம்படுத்தும் வகையில் புதிதாக 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்களைச் சுமார் 43,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் படி, ‘புராஜக்ட் 75 இந்தியா’ என்ற பெயரில் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இத்திட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ALSO READ  தினம் 45 ஆயிரம் பேருக்கு உணவு..மருத்துவர்களுக்கு 6 மாடி ஹோட்டல்.. நிஜத்தில் ஹீரோவான வில்லன்..… 

இந்நிலையில், ரூ.50 ஆயிரம் கோடி மதிப்புள்ள இத்திட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற, ராணுவ தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 

இதையடுத்து, மும்பையில் உள்ள அரசுக்கு சொந்தமான மஸாகான் கப்பல் கட்டும் தளம் மற்றும் எல் அண்ட் டி- நிறுவனத்துக்கு விரைவில் ஒப்பந்தம் அளிக்கப்பட உள்ளது.

ALSO READ  ஆபாச வீடியோவில் சிக்கிய பாஜக அமைச்சர் ராஜினாமா ! 

இவ்விரு நிறுவனங்களும் வெளி நாடுகளின் தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும். 

மேலும் மஸாகான் – எல் அண்ட்டி இணைந்து ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், தென் கொரியா ஆகிய 5 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டின் நிறுவனத்துடன் தொழில் நுட்ப ஒப்பந்தம் மேற்கொண்டு மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியிலிருந்து விலகல்

News Editor

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி !

News Editor

Лучшие Онлайн Казино 2023 ᐈ Списки Бонусов Отзыв

Shobika