இந்தியா

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அங்குள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கியது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவி வருகிறது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகிறது. 

ALSO READ  பிரிட்டனில் இருந்து வந்த ஆந்திர பெண்ணுக்கு கொரோனா தொற்று..!

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி  215 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்டணி 76 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி எதிர்த்து போட்டியிட்ட  பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட 1200 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் மூன்றாவது முறையாக மம்தா தலைமையிலான ஆட்சி மேற்குவங்கத்தில் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொது இடங்களில் புகையிலைப் பொருள்களை மென்று துப்பினால் 6 மாதம் சிறை…..

naveen santhakumar

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு-கவர்னர் ஒப்புதல்

naveen santhakumar

கேரளாவில் தனது பணியின் கடைசி நாளில் அலுவலகத்தில் தரையில் உறங்கிய IPS அதிகாரி..

naveen santhakumar