தமிழகம்

நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டம்- முதல்வர் ஸ்டாலின்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தலைமைச் செயலகத்தில், நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 1000 கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் அடையாளமாக 11 கலைஞர்களுக்கு நிதி ஒப்பளிப்பு ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்கள்.

இதன்மூலம், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதி உதவி திட்டத்தின் கீழ், 2018-2019 மற்றும் 2019-2020 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு தலா 500 நலிந்த கலைஞர்கள் வீதம் மொத்தம் 1000 நலிந்த கலைஞர்கள் பயனடைவார்கள். மேலும், நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவியை ரூ.2000/-த்திலிருந்து ரூ.3000/- ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

ALSO READ  ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த காவல் அதிகாரிக்கு மத்திய அரசு விருது
Image

இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 6600 அகவை முதிர்ந்த செவ்வியல் மற்றும் கிராமியக் கலைஞர்கள் பயன்பெறுவார்கள். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் பி. சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கருணாநிதி பிறந்தநாள்: முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்…!

naveen santhakumar

பள்ளிகளில் மதிய உணவு திட்டம் ஐந்தாண்டு நீட்டிக்க ஒப்புதல்..!!

Admin

அதிமுகவிற்கு தான் என்னுடைய ஆதரவு; நடிகர் சுமன் பேட்டி 

News Editor