தொழில்நுட்பம்

இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M21 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சாம்சங் கேலக்ஸி M21 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி சாம்சங் சார்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், புது M சீரிஸ் ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. 

இத்துடன் கேலக்ஸி M21 பிரைம் எடிஷன் பிஐஎஸ் சான்று பெற்று, கூகுள் பிளே சப்போர்ட் கொண்ட சாதனங்கள் பட்டியலிலும் இடம்பெற்று இருக்கிறது. புதிய பிரைம் எடிஷன் மாடலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி M21 மாடலில் வழங்கப்பட்ட அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி M21 பிரைம் எடிஷன் SM-M215G/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் கூகுள் பிளே சப்போர்ட் கொண்ட சாதனங்கள் பட்டியலிலும் இடம்பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகமான கேல்கஸி எம்21 மாடல் SM-M215F/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது.

ALSO READ  குறைந்த விலையில் சாம்சங் இயர்பட்ஸ் அறிமுகம் :

புது M21 பிரைம் எடிஷன் மாடலில் 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080×2340 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்பி கேமரா, அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குறைந்த விலையில் 32 இன்ச் புல் ஹெச்டி ரியல்மி ஸ்மார்ட் டிவி….!!!!!

Shobika

இணையதள சேவை முடக்கப்பட்டதால் இந்தியாவிற்கு பொருளதார பாதிப்பு

Admin

டங்ஸ்டன் இழை விளக்கு கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று

Admin