தமிழகம்

கோவில்களில் தமிழில் அர்ச்சனை; பெண்களை அர்ச்சகராக்கும் திட்டம்- அமைச்சர் சேகர் பாபு !!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலர் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

Imatge

இதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தைச் செயல்படுத்துவது, தமிழில் அர்ச்சனை செய்வது, பெண்களை அர்ச்சகராக்கும் திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,

ALSO READ  மீண்டும் நடிகர் சிம்பு ஆன்மீக பயணம் :

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும். தமிழில் அர்ச்சனை செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படும். முக்கிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகை வைக்கப்படும்.

தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர் , செல்போன் எண் அறிவிப்பு பலகையில் இடம் பெறும். ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை படியே ஜீயர்கள் நியமிக்கப்படுவர்.

ALSO READ  வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர் மனு தள்ளுபடி…

100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக இருப்பார்கள். பெண்களும் அர்ச்சகர்களாக விருப்பப்பட்டால், தமிழக அரசின் உதவி மூலம் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள்.

மேலும், கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 30 கோயில் யானைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சாதனை ஊக்கத்தொகை… தமிழ்நாடு அரசு அதிரடி!

naveen santhakumar

சிறார் ஆபாச பட விவகாரத்தில் தமிழக போலீசாரின் 600 பேர் பட்டியல் ரெடி

Admin

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

Shanthi