அரசியல் தமிழகம்

மக்கள் நீதி மய்யத்திற்கு புதிய நிர்வாகிகள் – மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

உள்ளாட்சி தேர்தல்கள் வருவதையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை இன்று அறிமுகப்படுத்தினார் மநீம தலைவர் கமல்ஹாசன்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவிற்குப் பிறகு, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் விலகினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தத் தேவையான மாற்றங்களைச் செய்வேன் என மநீம தலைவர் கமல்ஹாசன் கூறி இருந்தார்.

இதனிப்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மட்டுமல்லாது அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்ற இருப்பதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

ALSO READ  உள்ளாட்சி தேர்தல்: கூடுதல் கால அவகாசம் தேவை - தமிழக அரசு...!
Image

இத்துடன் புதிய நிர்வாகிகளும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பட்டியல் பின்வருமாறு.

Image
  1. பழ.கருப்பையா – அரசியல் ஆலோசகர்
  2. பொன்ராஜ் வெள்ளைச்சாமி – அரசியல் ஆலோசகர்
  3. ஏ.ஜி.மவுரியா – துணைத் தலைவர் – கட்டமைப்பு
  4. தங்கவேலு – துணைத் தலைவர் – களப்பணி மற்றும் செயல்படுத்துதல்
  5. செந்தில் ஆறுமுகம் – மாநிலச் செயலாளர் – தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு
  6. சிவ.இளங்கோ – மாநிலச் செயலாளர் – கட்டமைப்பு
  7. சரத்பாபு – மாநிலச் செயலாளர் – தலைமை நிலையம்
  8. ஸ்ரீப்ரியா சேதுபதி – நிர்வாகக் குழு உறுப்பினர்
  9. ஜி.நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்
ALSO READ  ஸ்டாலின் வீட்டு முன் தீக்குளித்த மதிமுக பிரமுகர்! பெரும் பரபரப்பு
Image

புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள கட்சி அறிக்கையில், கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம் என்றும் உறுப்பினர்களுடன் நடந்த இணைய வழி உரையாடலில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் அனல் காற்று; எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம் !

News Editor

சென்னை ஐ.ஐ.டி-ல் மாணவர்கள் கருப்பு நிற உடைகள் அணிய தடை விதிப்பு……

naveen santhakumar

டிஜிட்டல் வழிக்கல்வி – மத்திய அரசு விளக்கம் ..!

naveen santhakumar