சினிமா

நடிகையின் புதிய அவதாரம்: ரேஸ் கார் பயிற்சியை நிறைவு செய்த நிவேதா பெத்துராஜ்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை நிவேதா பெத்துராஜ் , பார்முலா ரேஸ் கார் பயிற்சியை முடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியதாவது,

கார்களின் மீதான காதல், பள்ளிக்கு சென்ற சிறு வயதிலேயே ஆரம்பித்துவிட்டது. நான் 8-வது படித்துகொண்டிருக்கும் போது எங்கள் வீட்டின் அருகில் வசித்த எனது அத்தை ஒருவர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார்கள்.

அப்போதிலிருந்தே ஸ்போர்ட்ஸ் கார் மீது தீவிர ஆர்வமும், வேட்கையும் என்னுள் உருவாகிவிட்டது. என்னுள் பல வருடங்களாக நீடித்திருந்த இந்த வேட்கையில் 2015-ல் “Dodge Challenger” ஸ்போர்ட்ஸ் காரை மிக ஆசையுடன் வாங்கினேன்.

UAE நாட்டில் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கிய இரண்டாவது பெண் நான் தான். ஆனால் இந்த காரில் மிக வேகமாக போக்கக்கூடிய V6 Engine இருந்ததை, எனது தந்தை விரும்பவில்லை.

ALSO READ  பூஜா ஹெக்டே செய்த காரியம்: பொதுமக்கள் ரியாக்சன் என்ன ?

ஆனால் நான் மிக நம்பிக்கயுடனும், உறுதியுடனும் அந்த காரை ஓட்டினேன். அது மிக அற்புத அனுபவமாக இருந்தது.

அதைத்தொடர்ந்து துபாயில், F1, மற்றும் Lexus, Rolls Royce, Chevrolet போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் Dubai Motor shows-க்களில் கலந்துகொண்டு வேலை செய்தேன். இது கார்களின் மீதான எனது காதலை இன்னும் அதிகமாக்கியது.

சென்னை வந்த பிறகு, சென்னையில் சில Motor tracks-களை சென்று பார்வையிட்டேன். ஆனால் அப்போது ஒரு போதும், நானும் ரேஸ் டிராக்கில் கார் ஒட்டுவேன் என நினைத்து பார்க்கவில்லை. ஒரு விளம்பர நிகழ்வை ஒட்டி BMW நிறுவனம் நடத்திய, அந்த வார சிறப்பு காரை ஓட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட போது கார்களின் மீதான காதல் என்னுள் மீண்டும் துளிர்த்தது.

கோயம்புத்தூரில் உள்ள Momentum – School of Advance Racing-கிற்கு எனது சகோதரருடன் சென்ற போது, அவர்கள் அளிக்கும் பயிற்சியை, என்னால் முடிக்க முடியுமா? எனும் பயம் என்னுள் உருவானது.

ALSO READ  பாண்டியன் ஸ்டோர் சீரியல் புகழ் 'முல்லை' தூக்கிட்டு தற்கொலை
Image

ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் 8 பேர் கலந்துகொள்வார்கள் அதில் ஒரே பெண் நான் தான். ட்ராக்ஸில் கலந்துகொண்ட அனுபவம் இருந்ததால் கார் ஓட்டும்போது எனக்கு நம்பிக்கை கூடியது. முடிவில் காரை ஓட்டி முடிக்கும் எனது Lap timings என்னுடன் கார் ஓட்டிய ஆண்களுக்கு இணையாக இருந்தது.

image

இது மோட்டார் விளையாட்டுகள் ஆண்களுக்கானது மட்டுமல்ல பெண்களுக்கும்தான் என்கிற மிகப்பெரிய தன்னம்பிக்கையை எனக்கு அளித்தது.

Image

நாகரிகம் இவ்வளவு முன்னேறிய காலத்திலும் பெண்களுக்கான ஃபார்முலா ஒன் மற்றும் ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்ஸ் நடத்தப்படுவதில்லை. விரைவில் பெண்களுக்கான முறையான கார் பந்தயங்கள் நடைபெறும் என நம்புகிறேன் என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்னைக்கு ராஜா தான்… தலைவரை புகழ்ந்த விக்கி

Admin

“கர்ணன்” படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

News Editor

விரைவில் “எனிமி” படத்தின் டீசர் வெளியீடு :

Shobika