தமிழகம்

செங்கல்பட்டில் தடுப்பு மருந்து தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

செங்கல்பட்டு:-

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனம் அமைந்துள்ளது. இது நீண்ட காலமாக செயல்படவில்லை.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனம் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் வேக்சின் தயாரிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

ALSO READ  நடிகர் விவேக் மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்
செங்கல்பட்டு தடுப்பூசி மையம்: செயல்பாட்டுக்குக் கொண்டுவர முதல்வர் ஸ்டாலின்  ஆலோசனை | Chengalpattu Vaccine Center: Chief Minister's advice to bring it  into operation - hindutamil.in

இதில் மத்திய அரசு துரிதமான நடவடிக்கை எதையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதோடு அனுமதியும் வழங்கவில்லை .

இந்நிலையில் மத்திய அரசிடம் பாரத் பயோடெக் நிறுவனம் உள்பட மேலும் 2 நிறுவனங்கள் இங்கு தடுப்பு மருந்து தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது

ALSO READ  கடன் தொல்லையால் வங்கி அதிகாரி செய்த விபரீதம்… கதவை திறந்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இதில் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு வேக்சின் தயாரிக்க அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தடுப்பு மருந்து தயாரிக்கப்படுவதால் கூடுதல் தடுப்பு மருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

News Editor

சில்லி சிக்கன் வியாபாரிக்கு சிலிண்டரால் நேர்ந்த கொடூரம் !

News Editor

பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் டி.டி.ரங்கசுவாமி மறைவு

naveen santhakumar