சினிமா

அறுவை சிகிச்சை முடிந்து வீல்சேரில் வீடு திரும்பிய அர்ச்சனா…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒரு காலத்தில் ரசிகர்கள் கொண்டாடிய தொகுப்பாளினிகளில் ஒருவர் அர்ச்சனா. தொடர்ந்து தொலைக்காட்சிகளில் மாறி மாறி தனது பணியை செய்து வருகிறார் அர்ச்சனா.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற இவர், விஜய் டிவியிலேயே Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

இதனிடையே, சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விட்டதாக அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ALSO READ  பிக் பாஸ் - கமல் ஒரு நாள் சம்பளம் இத்தனை கோடியா?

தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தனது நன்றியை தெரிவித்திருந்தார்.

மேலும், அவர் மருத்துவமனையில் இருந்து வீல்சேரில் வெளியே வந்து காரில் வீட்டுக்கு செல்லும் காட்சியும், வீட்டில் காரிலிருந்து இறங்கி வீல்சேரில் உட்கார்ந்து வீட்டிற்குள் செல்லும் காட்சியும் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  கமல் டிஸ்சார்ஜ்: கமல் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கை

இதனிடையே, பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அர்ச்சனாவை விமர்சனம் செய்த ரசிகர்கள் அவரது தற்போதைய நிலையை பார்த்து அவர் மீண்டும் பழையபடி மாற வேண்டும் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிம்புவின் படத்தை வெளியிடமாட்டோம்; திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கை !

News Editor

‘ஜாக் ரீச்சர்’ பட வாய்ப்பை டாம் க்ரூஸிடம் இழந்தேன் – WWE Rock…

naveen santhakumar

அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு !

News Editor