தமிழகம்

பள்ளிகள் திறப்பு- உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras HC says no to complete physical hearing from Monday due to surge in  COVID-19 cases - The Hindu

பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சத்துணவு கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்துள்ளதை அடுத்து கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் திறப்பதற்கு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ALSO READ  சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு- அமைச்சர் அன்பில் மகேஷ்..!

மேலும் மூன்றாவது அலை பரவுவதற்கு தற்போது வரை எந்த விதமான ஆதாரமும் இல்லை என்பதால் தமிழக அரசு இது குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இதனை அடுத்து தமிழக அரசு கிராமப்புறங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் ஆய்வு செய்யும் என்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் திறப்பது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மின் தடையை போக்க கடலில் காற்றாலை மின் உற்பத்தி

News Editor

ஆத்தூரில் காவல் ஆய்வாளர் உள்பட 117 பேருக்கு கொரோனா தொற்று !

News Editor

நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

naveen santhakumar