சினிமா

விஜய் பட நடிகைக்கு குவியும் பாராட்டுக்கள் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழில் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பின் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நெல்சன் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Pooja Hegde tests positive for Covid-19 | Entertainment News,The Indian  Express

பூஜா ஹெக்டே தனது நண்பர்களுடன் இணைந்து “All about Love“ எனும் அறக்கட்டளையை சமீபத்தில் தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் நலிந்த குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இது குறித்து பேசிய பூஜா ஹெக்டே, “மக்கள் எனக்கு கொடுக்கும் பணத்தை எதாவது ஒரு வழியில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். எனவே கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே அறக்கட்டளையை தொடங்கிவிட்டேன்.

Pooja Hegde shares the correct way of using an oximeter | Filmfare.com

தற்போது கொரோனா நேரத்தில் “All about Love“ அறக்கட்டளை மூலம் பல நலிந்த குடும்பங்களுக்கு பொருளாதார உதவியை செய்திருக்கிறோம். இதைத்தவிர மருத்துவசதி, ரேஷன் பொருட்களை கொடுத்து உதவி இருக்கிறோம். அதனால் இப்போது தெரியப்படுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். பூஜா ஹெக்டேவின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Share
ALSO READ  பிக் பாஸ் "ஆரி" படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு ..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யோகி பாபுவை புகழ்ந்த ஐபிஎல் வீரர் !

News Editor

நயன்தாராவுடன் திருமணம் எப்பொழுது?: விக்னேஷ் சிவன் கொடுத்த அடடே விளக்கம்..!

naveen santhakumar

‘கோடியில் ஒருவன்’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

News Editor