தமிழகம்

காப்பாத்துங்க மோடி.. காப்பாத்துங்க முதல்வரே… கைதாவதற்கு முன் கதறிய மீரா மிதுன்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பட்டியலினத்தவர் குறித்து தவறாக பேசிய விவகாரத்தில் மீரா மிதுன் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2016ம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றதாக கூறப்படுபவர் தமிழ்செல்வி என்கின்ற மீராமிதுன். இவரின் தமிழ் இயக்குநர்கள் சிலரை சாதிய ரீதியாக தாக்கி பேசிய வீடியோ வெளியானது.

அந்த வீடியோவில் தனது ஆண் நம்பருடன் மீரா தோன்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவதுடன் அந்த சமூகத்தை சார்ந்த இயக்குநர்களை திரை துறையை விட்டு நீக்கவேண்டும் என்று மிகவும் அறுவருக்கத்தக்க வகையில் சாடியிருந்தார்.

மீரா மிதுனின் இந்த அடாவடி பேச்சு பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருந்தார்.

அப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு – சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ALSO READ  தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து

ஆனால், என்னை கைது செய்ய முடியாது என்று காவல்துறைக்கு சவால் விடுக்கும் வகையில் பேசி ஆடியோ வெளியிட்டதோடு, இவரது வாய் கொழுப்பால் சிறைசெல்வதை காந்தி, நேரு உள்ளிட்ட தேச தலைவர்களோடு ஒப்பிட்டு பேசி அனைவரையும் கொலைவெறி ஆக்கினார்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுனை கேரளா போலீசார் உதவியுடன் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ALSO READ  காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24மணி நேரத்தில் புயலாக வலுவடையும்:

இதனிடையே, மீரா மிதுனை கைது செய்ய போலீசார் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்ற போது, அங்கு போலீசாரை கைது செய்ய விடாமல் மீரா மிதுன் தகராறில் ஈடுபட்டதோடு, அங்கு நடந்த சம்பவத்தை மீரா மிதுன் தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

மேலும், முதலமைச்சர் அவர்களே, பிரதமர் மோடி அவர்களே, இந்த தமிழ்நாடு போலீஸ் என்ன ரொம்ப டார்ச்சர் பன்றாங்க என்று முன்பு தௌலத்தாக சவால் விட்டவர் ஐயோ அம்மா என்று கதறி வீடியோ வெளியிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது…!!

Admin

நடிகர் விவேக் மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

naveen santhakumar

தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு!

Shanthi