தமிழகம்

தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக எடுத்த தமிழக அரசுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்த போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேத்தில் காற்று பலமாக வீசியதனால் பெரும்பலான இடங்களில் மற்றும் சாலைகளில் சாய்ந்த மரங்களை மாநகராட்சி பணியாளர்கள் இரவோடு இரவாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கனமழையின் காரணமாக மின்வெட்டுகள் இருந்த போதும் அவை உடனடியாக சரிசெய்யப்பட்டன.

மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முன்கூட்டியே பேரிடர் அமைப்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே தமிழக அரசு ஆலோசனை செய்து அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்து. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. இதனால் தமிழக அரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Share
ALSO READ  பசவராஜ் பொம்மை கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்பு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

10 ரூபாய் கட்டணத்தில் சென்னையை சுற்றி பார்க்க சுற்றுலாத் துறை அறிவிப்பு

Admin

புலி வேட்டையில் இறங்கிய நாட்டுநாய்…!

News Editor

பேரறிவாளன் விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

Admin