தமிழகம்

பள்ளிக்கு வர வேண்டாம்: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு திடீர் அறிவுறுத்தல்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருந்தால் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் 2 முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வர வேண்டும்:  பள்ளிக்கல்வித் துறை உத்தரவு…! - Tamil Thisai

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை படி அரசு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுத்தது. அதன் படி, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதன்படி பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் துவங்கி உள்ளன. கல்லுாரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ALSO READ  புத்தாண்டை கொண்டாட போக்குவரத்து விதிகளை மீறுவோர் மற்றும் பைக் பந்தயங்கில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை

பள்ளி திறந்த முதல் நாளிலேயே, கடலுாரில் பணிக்கு வந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல, நாமக்கல் மாவட்டத்தில், 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால், தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் தரப்பில் வழங்கப்பட்டுள்ள புதிய அறிவுரை:

ALSO READ  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மஞ்சுமா மோகன் !
No https://itunes.apple.com/us/app/club-it/id560033939?mt=8  https://play.google.com/store/apps/details?id=com.vishwak.maalaimalarnew&feature=search_result#?t=W251bGwsMSwyLDEsImNvbS52aXNod2FrLm1hYWxhaW1hbGFybmV3Il0  ஆசிரியர் ...

காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்; அருகில் உள்ள மருத்துவ மையங்களில் பரிசோதனை செய்து கொள்ளும்படி, அவர்களை அறிவுறுத்த வேண்டும்.

அதன்பின், தொற்று இல்லை என்று தெரிந்து உடல் நலம் தேறிய பின், பள்ளிக்கு வந்தால் போதும். மாணவர்களை பொறுத்தவரை பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆகஸ்டு இறுதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு??? 

naveen santhakumar

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 31 ஆயிரமாக குறைந்துள்ளது !

News Editor

பொதுத்தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம்..

Shanthi