உலகம்

கொரானா தொற்று நெருக்கடியால் கல்வி சமத்துவமின்மையை பெரிதும் அதிகரிப்பு – ஐ நா தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரானா தொற்று நெருக்கடியால் கல்வி சமத்துவமின்மையை பெரிதும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை ஆய்வு தெரிவிக்கிறது .

பள்ளிகள் மூடப்பட்டதால் 91 சதவிகித (160 கோடி) குழந்தைகளின் கல்வி பல மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் கொரானா தொற்று நீட்டிக்கப்படுவதைக் கண்டு டிஜிட்டல்கல்வியை நோக்கி நகர்ந்துள்ளன.

இருப்பினும், சுமார் 70 கோடி மாணவர்கள் பள்ளிக்கு வெளியே உள்ளனர். 143 நாடுகளில், 37 கோடி குழந்தைகள் உணவுக்காக பள்ளிகளை நம்பியுள்ளனர். பள்ளியைத் திறக்காதது குழந்தைகளின் பசியையும் ஊட்டச்சத்துக் குறைவையும் அதிகரித்தது. இது வரும் ஆண்டுகளில் அதிக உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை ஆய்வு தெரிவிக்கிறது .

ALSO READ  அடேங்கப்பா… உலக நாடுகளையே ஏமாற்றிய வங்கி ஊழியர்கள்
Virtual learning is okay, but no replacement for classroom lessons' -  Hindustan Times

பல வளரும் நாடுகள் தொடக்கக் கல்வியில் கூட பாலினசமத்துவத்தை அடைய முடியவில்லை. சுமார் 40 லட்சம் அகதி குழந்தைகள் தொடக்கக் கல்விக்கு வெளியில் உள்ளனர். கோவிட் முடிவடைந்தாலும், 2030 க்குள் பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை 20 கோடியை எட்டும் என்று ஐநா மதிப்பிடுகிறது.

ஆன்லைன் கல்வி உலகில் டிஜிட்டல் சமத்துவமின்மையை அதிகரித்துள்ளது. சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் தகவலின்படி, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி (370 மில்லியன்) பேருக்கு இணைய வசதி இல்லை என தெரிவிக்கின்றனர்.

ALSO READ  மாணவர்களுக்கு இலவச ஆணுறை - அதிர்ச்சியில் பெற்றோர்கள்

இது வளர்ச்சியடையாத நாடுகளில் மிகவும் மோசமாக உள்ளது. கிராமப்புற-நகர்ப்புற வேறுபாடுகள் மற்றும் பாலின வேறுபாடுகளும் அதிகம் உள்ளன. சஹாரா நாடுகளில் 93.3 சதவிகித வீடுகளில் கணினி இல்லை.

COVID-19: Parents are clashing over online vs in-person learning, court  lists factors to consider | Law Times

உலகளாவிய கல்வியால் கிடைத்த பயன்கள் ஆன்லைன் கல்வியால் சிதறுண்டு போயின. இது கொரானா தொற்று தொலைநோக்கு விளைவுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று ஐநா மதிப்பிடுகிறது. ‘டிஜிட்டல் சமத்துவமின்மையிலிருந்து எழுத்தறிவின் மனித நேயத்தை மீட்டெடுத்தல்’ என்பதே இந்த ஆண்டுக்கான உலக எழுத்தறிவு தின செய்தியாகும்.

Paedophiles targeting 5 Northern Ireland children a week online - Belfast  Live

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகிலேயே மிக இளம் வயது பிரதமர் இவர் தான் – சாதனைப் படைந்த பின்லாந்து பெண்

Admin

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு….4 பேர் பலி …3 பேர் படுகாயம்….

Shobika

உலகில் 10 கோடியை நெருங்கும் கொரோனா தொற்று !

News Editor