உலகம்

அமெரிக்க இரட்டைக் கோபுர தீவிரவாத தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒட்டுமொத்த உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய, அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்.

செப்டம்பர் 11 ஆம் தேதி 2001 ஆம் ஆண்டு உலக வல்லரசான அமெரிக்காவின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தற்கொலைப்படை தாக்குதலிற்காக மொத்தம் 4 பயணிகள் விமானம் பயணிகளுடன் கடத்தப்பட்டது. இதில் 246 பொதுமக்களும், 19 பயங்கரவாதிகளும் பயணித்தனர். இந்த விமானங்களைக் கொண்டு உலக வர்த்தக மையத்தின் இரண்டு கட்டிடத்தின் மீதும் மோதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் மொத்தம் 2973 பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக இந்த தாக்குதலுக்கு போயிங் நிறுவனத்தின் 757 மற்றும் 767 எண் வகை, அதிக எரிபொருள் கொள்ளளவு கொண்ட விமானங்களே பயன்படுத்தப்பட்டன.

செப்டம்பர் 11, 2001 காலை 7:59 மணிக்கு பாஸ்டனில் இருந்து கிளம்பிய விமானம் 8:46மணிக்கு உலக வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தின் மீது மோதி வெடிக்கச் செய்யப்பட்டது. இந்த இந்த தாக்குதலினால் ஏற்பட்ட அதிர்ச்சியும், மரண ஓலங்களும் அடங்குவதற்குள், மீண்டும் இரண்டாவதாக ஒரு விமானம் உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தின் மீது காலை 9:03 மணிக்கு மோதி வெடிக்கச் செய்யப்படுகிறது. இந்த இரண்டாவது தாக்குதலை, முதல் தாக்குதலுக்குப் பிறகு அங்கு வந்திருந்த செய்தித் தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்தன. இந்த காட்சிகள் உலக நாடுகளையே அச்சத்திற்குள்ளாக்கியது.

ALSO READ  லைவ் டெலிகாஸ்டின் போது செய்திவாசிப்பவரின் பல் விழுந்தது- அவர் நடந்து கொண்ட செயல் சமூக வலைதளங்களில் வைரல்...

இந்த இரண்டு தாக்குதல்களின் அதிர்ச்சி அடங்குவதற்குள், வெர்ஜீனியாவிலிருந்து புறப்பட்ட விமானமானது அமெரிக்க இராணுவக் கட்டுப்பாட்டு மையகமான பென்டகன் மீது காலை 9:37 மணிக்கு மோதி வெடிக்கச் செய்யப்பட்டது. நான்காவதாக கடத்தப்பட் விமானமானது ஷான்க்ஸின் நிலப்பரப்பின்மீது 10:03மணிக்கு மோதப்பட்டது. உலகை அச்சுறுத்திய இந்த தாக்குதலுக்கு அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் பொறுப்பேற்றார். இந்த நாளில் எடுக்கப்பட்ட அமெரிக்காவின் முடிவுதான் பின்லேடனையும், அல்கொய்தாவையும் அழிக்க வேண்டும் என்பது‌.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2011ஆம் ஆண்டு மே 11ம் தேதி இரவு 11மணியளவில் பிளாக்ஹாக் ஹெலிகாப்டரிலிருந்து சுமார் 20 நேவி சீல் வீரர்கள் பின்லேடன் வீட்டு மாடியில் தரையிறங்கினர். மின்சாரம் தடைபட்டு இருள் சுழ்ந்த, அந்த வீட்டின் மூன்றாவது தளத்தில் தங்கியிருந்தார் பின்லேடன். நவீன ஆயுதங்களுடன் சென்ற வீரர்கள் பின்லேடனை அவரது தலை மற்றும் உடலில் சுட்டுக்கொன்றனர். பெரும்பாலான குண்டுகள் அவர் தலையிலே சுடப்பட்டிருந்தது‌. இரவில் நடைபெற்ற இந்தத் திட்டத்தில், அனைத்தும் 40 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது. அவரது உயரம் மற்றும் இரத்த மாதிரி ஆகியவை கொண்டு பின்லேடன் இறப்பு உறுதி செய்யப்பட்டது. அவரது உடலை யாரும் வாங்க முன்வர மாட்டார்கள் என்பதால், அடையாளம் தெரியாத ஆழ்கடல் பகுதியில் வீசப்பட்டது. மொத்த செயல்முறையையும், பென்டகனிலிருந்து கண்காணித்துக் கொண்டிருந்தார், அன்றைய ஜனாதிபதி பாரக் ஒபாமா. ஒசாமா பின்லேடனின் இறப்பானது அமெரிக்காவின் ரணத்திற்கு மருந்தாக அமைந்தாலும், 911 தாக்குதலானது அமெரிக்க வரலாற்றில் என்றும் மாறாத வடுவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹாங்காங் விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவை நாடும் சீனா…

naveen santhakumar

இந்திய பெருங்கடலுக்கு மேலே வெடித்து சிதறிய ரஷ்ய ராக்கெட்..

naveen santhakumar

செவ்வாய் கிரகத்தின் பாறை மாதிரியை வெற்றிகரமாக சேகரித்தது பெர்சவரன்ஸ் ரோவர்..!

Admin