உலகம்

ஹாங்காங் விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவை நாடும் சீனா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெய்ஜிங்:-

ஹாங்காங்கில் ஜனநாயக போராட்டக்காரர்களை நசுக்குவதற்கு சீனா கடுமையான புதிய சட்ட (Draconian Law) மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவை கோரியுள்ளது. 

மேலும், ஹாங்காங்கை கட்டுக்குள் கொண்டு வரும் சட்டம் குறித்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஹாங்காங் சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், பிற நாடுகளின் தலையீட்டை ஏற்க முடியாது எனவும் சீனா தெரிவித்துள்ளது.

புதிய சட்ட மசோதா சொல்வது என்ன?

ஹாங்காங்கின் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றச் சீனா திட்டமிட்டுள்ளது.

ஹாங்காங்கின் சட்டக் கட்டமைப்பையும், அமலாக்க நடைமுறைகளையும் மேம்படுத்துவது அதன் நோக்கம் என்று சீனா கூறியுள்ளது. மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டால், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த ஒரு செயலையும் தடுத்து நிறுத்த, ஹாங்காங்கின் தலைமை நிர்வாகிக்கு அதிகாரம் வழங்கப்படும்.

அத்துடன், நாட்டு நிந்தனை, வெளிநாட்டுத் தலையீடு, பயங்கரவாதம் ஆகியவற்றையும் புதிய சட்டம் தடை செய்யும். இதன்மூலம், ஹாங்காங் மீதான சீனாவின் பிடி வலுவடையும். இது மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும், புதிய ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கும் என்று கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.

ALSO READ  பதவியை ராஜினாமா செய்த ஸ்வீடன் நாட்டு பிரதமர் :

இதன் மூலமாக ஹாங்காங்கில் “ஒரு நாடு இரு ஆட்சிமுறை” கொள்கை பெரும் வெற்றி பெற்றிருப்பதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹாங்காங்-ஐ சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் மசோதா:-

இதன் மூலம் ஹாங்காங்கை சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வரும் சட்ட முன்வடிவு மீதான விவாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கி உள்ளது. அடுத்த வாரத்திற்குள் இது சட்டமாகும் நிலையில் ஹாங்காங்கில் மீண்டும் புரட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

பெய்ஜிங்குக்கு எதிரான தேசத் துரோக நடவடிக்கையில் ஈடுபடுதல், சீனாவில் இருந்து பிரிவினை மற்றும் சீனாவுக்கு அடிபணிய மறுத்தால், புதிய சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. 

ALSO READ  மருத்துவமனையில் திடீர் தீ விபத்து 10 பச்சிளங்குழந்தைகள் பலி..! 

ஹாங்காங்கில்  தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ள அமைதியான முறையில் ஒன்று கூடல், பேச்சுரிமை ஆகியவற்றுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஒரு நாடு, இரு ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வர சீனா முயலுவதாக கூறப்படுகிறது. 

இதனிடையே, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களுக்கு அந்நாடு பிரத்யேக முறையில் விளக்கம் அளித்துள்ளது. ஹாங்காங்கில் உள்ள தங்களின்  விருப்பத்தை நிறைவு செய்ய, இந்த சட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும், மேலும் இது சீனாவின் உள்நாட்டு விவகாரம் எனவும் அந்நாடு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த விவகாரத்தில் வேறுநாட்டின் தலையீடு எதையும் சீனா பொறுத்துக் கொள்ளாது எனவும் பிற நாடுகளின் தூதர்களிடம், சீன பிரதிநிதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டத்தை கொண்டு வர சீனா தொடர்ந்து முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கடைசியில் நாய்களையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்….

naveen santhakumar

கூகுளின் மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்; அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய அரசு..!

News Editor

காபூலில் குருத்வாரா மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்- 27 சீக்கியர்கள் பலி….

naveen santhakumar