தமிழகம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் புதிய நடைமுறை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக அரசின் காலிப் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வில் விரைவில் புதிய முறை அமலுக்கு வரவுள்ளது.

TNPSC : டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் இனி தமிழுக்கு முதலிடம் | First for Tamil  at TNPSC Exam – News18 Tamil

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டிற்கு 30க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தி, சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வில் புதிய மாற்றங்களை தற்போது கொண்டு வந்துள்ளது. அதன்படி, தமிழ் பாட தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  மோசடி- தலைமறைவாக இருந்த எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் கைது!

மேலும், பொதுத்தேர்வுக்கு முன் தமிழ் பாடத்தாள் தகுதி தேர்வை நடத்த டிஎன்பிஎஸ்சி பரிசீலிப்பதாகவும் கூறப்படுகிறது.

குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த சட்டப்பேரவையில் தமிழகத்தில் அரசுத் துறை, மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ALSO READ  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… ஆட்சியர் பிறப்பித்த திடீர் உத்தரவு!

இதனைத்தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். இதன்பின் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும். அந்தத் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தப்படும் என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது என்பது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொங்கல் பண்டிகை: ஆளுநர்,முதலமைச்சர் வாழ்த்து

Admin

வேதாரண்யத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்….ஒருவழியாக அனைத்து குற்றவாளிகளும் கைது….

naveen santhakumar

1 -12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

naveen santhakumar