இந்தியா

விபத்தில் சிக்கியவருக்கு தைரியமாக உதவிடலாம் : பரிசும் உண்டு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:

ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுபர்களுக்கு பரிசுத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது.

எந்த ஒரு விபத்தில் சிக்கியவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்ற உதவுவோருக்கு ரூ.5,000 பரிசு வழங்கும் திட்டத்தை ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் தொடங்க உள்ளது.

இத்திட்டம் 15ம் தேதி நாடு முழுவதும் அமலாகும் என ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

Help road accident victims and get Rs 5000 cash rewards under govt's 'Good  Samaritan' scheme; check details here

நமது நாட்டில் சாலை விபத்தால் ஏற்படும் மரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. விபத்தில் சிக்குவோரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும்.

ALSO READ  வைகை எக்ஸ்பிரசுக்கு 40 வயசாச்சு

ஆனால் தற்போதுள்ள நடைமுறையில் உதவி செய்பவர்களுக்கு பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்படுவதால் உடனடியாக உதவிட யாரும் முன் வருவதில்லை. இதனால் பெரும்பாலான விபத்துகளில் காயமடைந்தவர் தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதால் அவரின் உயிரை காப்பாற்ற இயலாமல் போய்விடுகிறது.

விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடுபவர்களை, ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் விபத்து நடந்தவுடன் சற்று நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்த்து, பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்றுவோருக்கு ₹5000 பரிசு வழங்கப்படும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

ALSO READ  ஹேப்பி நியூஸ் - ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம் - முதல்வர் அறிவிப்பு !

விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்ற உதவுவோருக்கான இத்திட்டம் வரும் 15ம் தேதி அமல் படுத்த ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்ற உதவுவோருக்கான இத்திட்டம் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்றும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விமானங்களில் சர்க்கரைக்குப் பதில் தேன் கொடுக்க மத்திய அமைச்சர் கோரிக்கை!

Admin

முகக்கவசம் அணியாவிட்டால் ஒரு லட்சம் அபராதம்; வெளியே சுற்றினால் இரண்டு ஆண்டு சிறை- அரசு அதிரடி….

naveen santhakumar

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடாக்கு கொரோனா :

naveen santhakumar