ஜோதிடம்

சீமானை குண்டாசில் கைது செய்ய வேண்டும் ; நாதக பயங்கரவாத அமைப்பாக மாற வாய்ப்புள்ளது – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத, சமூக சீர்குலைவு சக்தியாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விளங்கி வருவதாகவும், சீமானின் வன்முறை பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் பயங்கரவாத பாதைக்கு செல்ல நேரிடும் எனவே சீமானை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

சீமான் பின்னால் இருக்கும் மர்ம ரகசியத்தை..நாம் தமிழர் கட்சி 3வது பெரிய  கட்சியா? வெடிக்கும் கே.எஸ்.அழகிரி

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மறைந்த ராஜிவ் காந்தியையும், காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தியையும் தனிப்பட்ட முறையில் சீமான் இழிவுப்படுத்தி பேசுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பிறகு 1991-ல் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது.

இந்தியாவை பொறுத்த வரை விடுதலைப்புலிகள் அமைப்பிற்கான தடை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014-ல் நீட்டிக்கப்பட்ட தடை 2019-ல் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியையும், சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சீமான் பேசியது சமூக ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளது.

ALSO READ  கொரோனா வைரஸ் பரவல்.... தனது வலிமையைகாட்டும் வடகொரிய அதிபர் கிம்....

இத்தகைய கூட்டங்களில் வன்முறையை தூண்டுகிற வகையிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற போக்கிலும் அவர் பேசி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

வளசரவாக்கம், ஐயப்பன் தாங்கல் பகுதியில் இவர் தங்கியிருந்த இடங்களில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்களும், தமிழ்நாட்டிலிருந்து பெரும் நிதியை இலங்கைக்கு அனுப்பிய ஆதாரங்களும் சிக்கியுள்ளன. இவர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் வெளி வந்திருக்கிறார்.

ALSO READ  2020 ஆம் ஆண்டு மீன ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்..

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சற்குணனுக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் மூலமாக பெரும் நிதி சீமானுக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்பட்டு வருகிற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இத்தகைய சீர்குலைவு சக்திகளை முளையிலேயே கிள்ளி எறியவில்லையெனில் அவரது வன்முறை பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் தவறான தீவிரவாத பாதைக்கு செல்ல நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

இந்த போக்கு தடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சி ஒரு பயங்கரவாத அமைப்பாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ் ஆராய்ச்சிக்கு 3.7 மில்லியன் டாலர் வழங்கிய அமெரிக்கா ….

naveen santhakumar

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் என்னென்ன? முதல்வர் அறிவிப்பு…

naveen santhakumar

டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தை தரவரிசை சுற்றில் தீபிகா குமாரிக்கு 9வது இடம்…!

naveen santhakumar