இந்தியா

15 ஆண்டு பழைய வாகனங்கள் இயக்க ஏப்ரல் 2022 முதல் தடை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி :

ஒன்றிய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள புதிய வாகன உபயோக சட்டத்தின் படி சொந்த உபயோகத்திற்கு இருக்கும் வாகனத்தை இருபது வருடமும் வாடகை வாகனத்தை 15 வருடம் மட்டுமே சாலையில் ஓட்ட வேண்டும் என்று புதிதாக சட்டம் பிறப்பித்துள்ளது.

புதிய சட்டமானது வரும் 2022ஆம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

Scrappage Policy is here: Will you be able to drive your 15 year old vehicle  from 1st April 2021 - Auto News

15 ஆண்டுகளாகி விட்ட பழைய வாகனங்கள் இயக்கப்படுவதால் தான், காற்று மாசு அதிகரிக்கிறது என, சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துஉள்ளனர். ஆகவே 15 ஆண்டுகளான பழைய வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

vehicle scrappage policy: States to offer up to 25% road tax concession for  vehicles purchased after scrapping old ones, Auto News, ET Auto

அதுபோன்று புதுடில்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களையும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்கள் பயணிப்பதால் தான், காற்று மாசு அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்திட்டுள்ளனர்.

ALSO READ  பரவும் கொரோனா; ஊரடங்கை நீட்டித்தது ஆந்திர அரசு !
PM Modi Launches Vehicle Scrappage Policy – Best News for Kids: The  Childrens Post of India

இதையடுத்து, 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை அழிக்க, ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே பழைய வாகனங்களின் பதிவு புதுப்பித்தலுக்கான கட்டணத்தை எட்டு மடங்கு உயர்த்தியுள்ளது. தற்போது, 15 ஆண்டுகளுக்கு மேல் ஓடியிருக்கும் பழைய கார்களின் பதிவுகளை புதுப்பிக்க, 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் எட்டு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டு 5,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  BPO ஊழியர்கள் எங்கிருந்தும் வேலை செய்யலாம்-அரசு அனுமதி:
How The Vehicle Scrappage Policy Would Shape The Indian Auto Sector -Amit  Kumar. - BW Businessworld

அதேபோல், வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய பஸ், லாரி போன்ற வாகனங்களுக்கான தகுதி சான்று கட்டணமும் எட்டு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட்..? கால்பந்து போட்டி காணச்சென்றது காரணமா?

naveen santhakumar

நடிகர் பிரசாந்த் மீது விமான நிலைய பெண் ஊழியர் பண மோசடி புகார்..

Shanthi

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு..!

News Editor