சினிமா

அடடே சொல்லவைக்கும் அரவிந்த் சாமி நியூ லுக்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அரவிந்த் சாமி திரையுலகில் 30 வருடங்களாக நடித்து வருகிறார். 2015-ம் ஆண்டு வெளியான தனி ஒருவன் படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்து ஸ்டைலிஸ் வில்லன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டார். இவர் மூலம் வில்லனும் ஸ்டைலாக இருக்கலாம் என்ற லாஜிக்கை திரையுலகம் ஏற்றது.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை சினிமாவாக்கப்பட்டு வருகிறது. இதை இயக்குனர் விஜய், தலைவி என்ற பெயரில் இயக்கி வருகிறார். தலைவி படத்தில் நடிகர் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து வருகிறார்.

அரவிந்த் சாமியா இது...? நியூ லுக் பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள்

இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

ALSO READ  ராகவ லாரன்ஸ்க்கு ஜோடியா பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம்..! 
பிரகாஷ்ராஜ் கருணாநிதியாகவும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக பிரியாமணி நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்தப் படத்தில் ‘எம்ஜிஆர் லுக்’ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. எம்.ஜி.ஆர்.பிறந்த நாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரவிந்த் சாமி, அப்படியே எம்.ஜி.ஆர் போலவே இருக்கிறார்.

இந்நிலையில் ட்விட்டரில் நியூ லுக் புகைப்படங்களை அரவிந்த் சாமி வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடித்த எனது புதிய லுக் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  யோகி பாபுவை புகழ்ந்த ஐபிஎல் வீரர் !

ஸ்பெஷல் டீசர் ஒன்றையும் படக்குழு இன்று வெளியிட இருக்கிறது. இதற்கிடையே, அரவிந்த் சாமியின் லுக்குகள் இரண்டும் அப்படியே எம்.ஜி.ஆர் போலவே இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து ‘தலைவி’ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.



Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மூக்குத்தி அம்மன் சீக்ரெட் சொன்ன ஆர்.ஜே.பாலாஜி

Admin

நடிகர் சூர்யா நிறுவனத்தின் CEO ரைஃபில் கிளப் செயலாளராக தேர்வு !

News Editor

மினுக்கும் உடையில் ஆத்மீகா அல்டராமாடன் லுக்

Admin