தமிழகம்

நளினிக்கு பரோல் கேட்டு தாய் வழக்கு… தமிழக அரசு சொன்னது என்ன?

Nalini
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கவேண்டுமென அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், தன்னைக் கவனித்துக்கொள்ள மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே நளினியின் தாயார் பத்மா அளித்த மனு அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், அதுகுறித்து விளக்கமளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ALSO READ  பெண்களுக்கு புதுமையை ஏற்படுத்தி கொடுத்த புதுக்கோட்டை....

வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசின் இந்த முடிவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நளினியின் தாயார் பத்மா தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆழியாறு அணையிலிருந்து நீர் திறப்பு-முதல்வர் உத்தரவு:

naveen santhakumar

காளையுடன், பிரித்து எடுத்து செல்லப்பட்ட பசுவை, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். சொந்த செலவில் வாங்கி காளையுடன் சேர்த்து வைத்தார்…. 

naveen santhakumar

அதிகரிக்கும் கொரோனா; பிரபல மாட்டு சந்தை மூடல் !

News Editor