தமிழகம்

காளையுடன், பிரித்து எடுத்து செல்லப்பட்ட பசுவை, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். சொந்த செலவில் வாங்கி காளையுடன் சேர்த்து வைத்தார்…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை:-

மதுரை மாவட்டம், பாலமேட்டில், ஒன்றாக வளர்ந்த பசுமாடு, பிரிந்து செல்வதை ஏற்க முடியாத காளைமாடு வாகனத்தை மறித்து பாசப் போராட்டம் நடத்தியது. 

மதுரை பாலமேடு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் பசு மாடு வளர்த்து வந்துள்ளார். இவரது பசுவுடன் சேர்ந்து அருகில் பாலமேடு மஞ்சமலை கோவில் காளையும் மேய்ச்சலில் ஈடுப்படுவது வழக்கம். ஊரடங்கால் வறுமையில் தவித்த முனியாண்டி இந்த பசுவை விற்க முடிவு செய்துள்ளார்.

ALSO READ  ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மதுரை மாநகரின் மையப்பகுதியில் உள்ள தமுக்கம் மைதானத்தை இடிக்கும் பணி தொடங்கியது.

இதனால் பசுவை வாகனத்தில் ஏற்றி அனுப்ப முடிவு செய்துள்ளார் பசுமாடு கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை பின்தொடர்ந்து ஓடியது. இந்த பாச போராட்டம் தந்தி தொலைக்காட்சியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. 

இதன் எதிரொலியாக, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் விற்கப்பட்ட பசு மாட்டினை வாங்கி கோவிலுக்கு, தானமாக வழங்கி காளையுடன் சேர்த்து வைத்தார். துணை முதலமைச்சரின் மகன் ஜெயபிரதீப், நேரில் வந்து பாலமேடு கோவிலில் ஒப்படைத்தார்.

ALSO READ  தூக்கு போடுவது குறித்து விளக்கமளித்த புதுமாப்பிள்ளை பலி


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்- பள்ளிக்கல்வி ஆணையர்

naveen santhakumar

ஜாதிமறுப்பு திருமணம் செய்த ஜோடி கடத்தல்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் #இளமதி_எங்கே ஹேஷ்டேக்…!!!

naveen santhakumar

அப்படி என்ன சரக்குணே அடிச்ச ..? போதையில் தண்டவாளத்தில் தூங்கிய நபர்

News Editor