சினிமா

‘வலிமை’ பொங்கல்…. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

Valimai
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நேர்கொண்ட பார்வை படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியைத் தொடர்ந்து அஜித் குமார், போனிகபூர், ஹெ.வினோத் கூட்டணி வலிமை படத்தில் ஒன்றினைந்தது. கார்த்திகேயா வில்லனாக நடிக்க, ஹுமா குரேஷி, யோகி பாபு, புகழ், சுமித்ரா, ராஜ் அய்யப்பா உள்ளிட்ட் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கான அப்டேட்டுகளை கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் கேட்டு, உலகளவில் டிரெண்ட் செய்தனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முதல் கால்பந்து மைதானம் வரை என வலிமை அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் அதகளப்படுத்தினர். திருச்செந்தூர் முருகனில் இருந்து பிரதமர் மோடி வரை அப்டேட் கேட்டு வந்தனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலான அஜித் ரசிகர்களின் காத்திருப்புக்கு பலனாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள், விசில் தீம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில், இன்று படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ‘வலிமை’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி வியாழக்கிழமை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  வலிமை படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட போனி கபூர் !

‘வலிமை’ திரைப்படத்திற்கு, தணிக்கைத்துறை யு/ஏ சான்று வழங்கியுள்ளது. மேலும், இந்த திரைப்படம் 178 நிமிடங்கள் நீளம் கொண்டது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை சயீஷா கர்ப்பம்.!! தீயாய் பரவும் செய்தி..

naveen santhakumar

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் ‘AV 33’ படக்குழு !

News Editor

‘தளபதி 65’ படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்ற விஜய்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

News Editor