தமிழகம்

நாளை வைகுண்ட ஏகாதசி… போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வைகுண்டஏகாதசி திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவிலில் நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும், கொரானா தடுப்பு நடவடிக்கைகாகவும் செய்யப்பட்டுள்ள கீழ்கண்ட வழிமுறைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

( i ) வரும் 12.01.2022 இரவு 10.00 மணி முதல் 13.01.2022 காலை 06.00 மணி வரை பக்தர்கள் திருக்கோயிலின் உள்ளே செல்ல அனுமதி இல்லை.

( ii ) 13.01.2022 அன்று காலை 06.15 மணிக்கு மேல் இரவு 8.00 மணி வரை அரசால் வெளியிடப்பட்டுள்ள கோவிட் -19 நோய் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

( ii ) வைகுண்ட ஏகாதசி நிகழ்வுகள் தொலைக்காட்சி மற்றும் யுடியுப் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு இந்து சமய அறநிலைய துறை தகுந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.

ALSO READ  நில அளவீட்டு கட்டணத்தை 40 மடங்கு உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு!... 

( iv ) முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு திருக்கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.

( v ) சமூக இடைவெளி கடைப்பிடித்து வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

( vi ) 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் உடல் நலன் கருதி தரிசனத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ALSO READ  பொதுத்தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம்..

( vi ) பக்தர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்புதான் திருக்கோயில் உள்ளே நுழைய வேண்டும். பக்தர்களின் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்புதான் திருக்கோயில் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவர்.

( viii ) 14.01.2022 முதல் 18.01.2022 வரை பக்தர்கள் திருக்கோயிலுக்குள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுச்சேரி-மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கிறதா????

naveen santhakumar

வேலூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா….

naveen santhakumar

ஒரே நாடு ஒரே ரேஷன் நாளை முதல் அமல்!

Admin