இந்தியா

பொது விடுமுறையில் திடீர் மாற்றம்… முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையால் அவசர உத்தரவு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி முதல்வராக இருந்த போது, அன்றைய கேரள முதல்வர் அச்சுதானந்தனை தமிழர்கள் அதிகமாக வாழும் ஆறு கேரள மாவட்டங்களுக்கு, தமிழகத்தில் ஓணம் பண்டிகைக்கு வட்டார விடுமுறை அளிப்பதைப் போல தை மாதம் ஒன்றாம் நாள் பொங்கல் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற உத்தரவை பெற்றுத்தந்ததை குறிப்பிட்டிருந்தார். மேலும் தற்போது ஜனவரி 15ம் தேதிக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தைப் பொங்கலான ஜனவரி 14 விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இனையத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் கொல்லம், இடுக்கி, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.


Share
ALSO READ  11 மாவட்டங்களுக்கு தளர்வில்லை !!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1win Bahis Sitesi Türkçe Giriş Yap Ve Kaydol İlk Para Yatırma Işleminizde 0 Kazanın

Shobika

“லஸ்ஸோ” செயலி விரைவில் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

Admin

21 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்பு:

naveen santhakumar