தமிழகம்

இனி அலுவலகங்களில் “இது கட்டாயம்”.. சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பணியிடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் போட்டி போட்டு பரவி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அலுவலகங்களில் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், பணிபுரியும் போது மாஸ்க் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

ALSO READ  பொறியியல் பட்டப்படிப்பு முதல் செமஸ்டர் மாணவர்களுக்கு நவம்பர்-23-ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்:

அறிகுறி உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் சோதனை செய்ய வேண்டும்.

அனைத்து பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

300 பேருக்கு அதிகமாக இருக்கும் தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும்.

ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா என்பதை உறுதி செய்திட தேவையான சூப்பர்வைசர்கள் அல்லது மேலாளர்களை நியமிக்கவேண்டும்.

பணியிடங்களில் ஒரு நபருக்கு இடைவெளி 2 மீட்டர் உள்ளபடி பணி இடத்தை மாற்றி அமைத்திட வேண்டும்.

ALSO READ  வேலூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா....

பணியிடங்களில் இடைவெளிவிட்டு மாற்றி அமைக்க முடியாத சூழலில் வெளிப்படையான திரைகள் மூலம் 2 மீட்டர் இடைவெளியை உறுதி செய்திட வேண்டும்.

அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கேன்டீன் போன்ற இடங்களில் கூட ஒரே சமயத்தில் 50 சதவீதம் பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட வேண்டும் என தனியார் நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சசிகலா நலமுடன் இருக்கிறார்….கொரோனா தொற்று இல்லை…..

naveen santhakumar

பொங்கல் விழாவை முன்னிட்டு கனடா பிரதமர் வாழ்த்து

Admin

தீபாவளி – பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு…மீறினால் நடவடிக்கை…!

naveen santhakumar