தமிழகம்

அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு நாளை தொடக்கம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு நாளை (21ஆம் தேதி) முதல் தொடங்குகிறது.

தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாட தங்கள் சொந்த ஊர் பயணத்தை திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டியுள்ளதால் அக்டோபர் 22ஆம் தேதி பயணம் செய்ய நாளை (புதன்கிழமை) முதல் முன்பதிவு தொடங்குகிறது. இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் பேசியபோது, அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது என்றும் அதன்படி தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது என்றும் www.tnstc.com என்ற இணைய தளம் வழியாக முன்பதிவு செய்யலாம் எனவும் கூறினார்கள்.

ALSO READ  செங்கல்பட்டில் தடுப்பு மருந்து தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி ?

மேலும் பயணிகளின் முன்பதிவை பொறுத்து கூடுதலாக 1000-க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு முன்பதிவு செய்யப்படும் எனவும் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 போக்குவரத்து கழகங்களில் இருந்து பஸ்கள் பெறப்பட்டு முன்பதிவில் இணைக்கப்படும் எனவும் விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி:

naveen santhakumar

குட்கா சப்ளை செய்த பார்சல் நிறுவனம் சீல் வைப்பு:

naveen santhakumar

முடிந்தால் வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டுங்கள்; கே.என் நேருக்கு பதிலளித்த தேர்தல் அலுவலர் !

News Editor