இந்தியா

குரங்குகளை பயமுறுத்த கரடியாக மாறிய மக்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உத்தரபிரதேசத்தில் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த மக்கள் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள சிக்கந்தர்பூர் கிராமம் வனப்பகுதிக்கு அருகே அமைந்துள்ளது, இதனால் அடிக்கடி கிராமத்திற்குள் புகும் குரங்குகள் உணவுப்பொருட்களை சாப்பிடுவது, பொருட்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது.

பொறுத்து பொறுத்து பார்த்த அக்கிராம மக்கள் இதற்கு ஒருமுடிவு கட்ட வேண்டும் என்று வித்தியாசமான யோசனையை கையில் எடுத்தனர்.

ALSO READ  ஊரடங்கு உத்தரவு: குடும்ப தகறாறு... கங்கையில் 5 குழந்தைகளை வீசி கொன்ற பெண்....

அதன்படி குரங்குகள் வரும் சமயம் அதனை பயமுறுத்தி விரட்ட கரடியை போல உடை அணிந்து அக்கிராம மக்கள் உலா வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கிராம தலைவர் கூறுகையில், 2000க்கும் மேற்பட்ட குரங்குக எங்களுக்கு தொல்லை ஏற்படுத்தி கொடுத்ததாகவும், வனத்துறைக்கு தகவல் தெரிவித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார். அதனால் தான் நாடக கலைஞர்களிடம் இருந்து கரடி உடைகளை வாங்கி நாங்களே களத்தில் இறங்கினோம் என கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியுங்கள், நீதிமன்றத்தில் சோனியா மருமகன் முறையீடு

Admin

Официальные Казино и России: Лучшие Интернет Бренды С Онлайн Слотам

Shobika

அனைத்து மாநில முதல்வர்களுடனும் வருகின்ற 11-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை:

naveen santhakumar