சாதனையாளர்கள் தமிழகம்

ஜெயலலிதா பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது- எதற்கு தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


ஜெயலலிதாவின் பெயர் கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்திருக்கிறது.

1995-ஆம் ஆண்டு தன்னுடைய வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு மிக பிரம்மாண்டமாக 1.5 லட்சம் பேரை அழைத்து திருமணம் நடத்தி வைத்தார்.இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. உலக ஊடகங்கள் அனைத்தும் இந்த பிரம்மாண்ட திருமணம் குறித்து மாய்ந்து மாய்ந்து எழுதின.

திரைப்பட கலை இயக்குநர் தோட்டாதரணியைக் கொண்டு 70,000 சதுர அடி பரப்பளவில் பந்தல் போடப்பட்டது; ஒரே சமயத்தில், அங்கு 25,000 பேர் அமர்ந்து உணவு உண்பதற்காக அரங்கு அமைக்கப்பட்டது. வெளியூர்களிலிருந்து வரும் விருந்தினர்கள் தங்குவதற்காக சென்னையில் மட்டும் வெவ்வேறு ஹோட்டல்களில் 1,000 அறைகள் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ALSO READ  ஜெயலலிதா என்ற பெயர் எப்படி வந்தது - சுவாரஸ்ய தகவல்கள்

திருமணத்துக்கு வந்தவர்களுக்குக் கொடுப்பதற்காக 2 லட்சம் தாம்பூலப் பைகள் வாங்கப்பட்டதாக அறியப்பட்டது. இவை மட்டும் அல்ல.

ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி, வாணவேடிக்கை என தமிழகமே அதுவரை கண்டிராத திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது

திருமண ஊர்வலத்தில் தங்க நிற ஆடைகள் அணிந்து ஜெயலலிதாவும், சசிகலாவும் நடந்து வந்தனர்.

ALSO READ  தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

ஆனால் பின்னாளில் இந்தியா டுடே நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் ஜெயலலிதா இப்படி குறிப்பிட்டிருந்தார் “ஆம். நான் என் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு சுதாகரன் திருமணத்தை அவ்வளவு ஆடம்பரமாக நடத்தியது என்று தானானகேவே ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்த தமிழக பட்ஜெட்

Admin

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 499 செலுத்தி முன்பதிவு

News Editor

நீட் தேர்வு பாதிப்புகள்: 85,935 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன – ஏ.கே.ராஜன் குழு …!!!

naveen santhakumar