ஜோதிடம்

2020-ம் ஆண்டு கும்ப ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடல் ஆரோக்கியம்

உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். ஆனாலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். தூரப் பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் வீண் பிரச்சனைகள் தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை யாக இருக்கலாம் .குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டிய காலம் என்பதால் நிதானமாக பேசுங்கள்.

தொழில் வியாபாரம்

ALSO READ  ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடும் பின்னடைவு !

தொழில் வியாபாரத்தில் மந்தமான நிலை ஏற்பட்டாலும் லாபத்தை காணமுடியும். புதிய தொழில் தொடங்குவதில் சில தடைகள் ஏற்பட்டாலும் பலன் உண்டாகும். உடன் பணிபுரியும் தொழிலாளியிடம் விட்டுக்கொடுத்து நடந்து செல்வது அவசியம் .எந்த பிரச்சினை வந்தாலும் எதிர் நீச்சல் போட்டு முன்னேறி விடுவீர்கள்.

ALSO READ  உங்களுக்கு முன் ஜென்ம பாவம் இருக்கா.. இந்த பரிகாரங்கள பண்ணிருங்க....

உத்தியோகம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிப்பதோடு பொறுப்புகளும் அதிகரிக்கும். அதனால் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல்நலக்குறைவால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் பெருக்கி லாபங்கள் கிடைக்கும் என்றாலும் வேலை ஆட்கள் கிடைக்க சிரமம் உண்டாகும்.உடல் அசதியால் சரியாக பணியினைச் செய்து முடிக்க முடியாது .எந்த விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மகா சிவராத்திரி தானம் : மகா புண்ணியம்..!!!

naveen santhakumar

2020 ஆம் ஆண்டு மிதுன ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

Admin

இனி ரூ.2000 கிடையாது – ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி

Admin