ஜோதிடம்

2020 ஆம் ஆண்டு மிதுன ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடல் ஆரோக்கியம்

2020 ஆம் ஆண்டு உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டி இருக்கும். பாதிப்புகள் ஏற்பட்டாலும் செலவுகளை உண்டாக்கும். குடும்ப உறுப்பினர்களால் மருத்துவ செலவுகளும் ஏற்படக்கூடும். தேவையற்ற பயணங்களால் உடல் சோர்வடையும்.

குடும்பம் ,பொருளாதார நிலை

கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். பொருளாதார நிலையில் நெருக்கடி ஏற்பட்டு குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவே கஷ்டப்படுவீர்கள். உறவினர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக நடக்கவிருந்த சுப காரியங்கள் தாமதமாகும். குழந்தைகள் உங்கள் பேச்சை மதிக்காமல் நடப்பதால் கசப்புகள் உண்டாகும்.

தொழில் ,வியாபாரம்

ALSO READ  நீங்கள் இப்படி சாப்பிடுபவராக இருந்தால்….. நிச்சயம் உங்கள் வீட்டில் தரித்திரம் கங்ணம் ஸ்டைலில் நடனமாடும்:

வியாபாரத்தில் மந்தமான நிலை நிலவும். சுற்றியிருப்பவர்கள் இடையே பொறாமை நிலவுவதால் லாபம் குறையும். லாபத்தை பெறுவதற்கு நீங்கள் எதிர் நீச்சல் போட வேண்டும். பெரிய அளவு முதலீடு செய்வதில் கவனமுடன் நடந்து கொண்டால் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும்.

உத்தியோகம்

பணியில் கவனமுடன் செயல்பட வேண்டும். கவனக் குறைவுடன் செயல்பட்டால் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.பணி இடமாற்றங்களால் அலைச்சல் ஏற்படும் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க கூடும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால் வேலைப்பளு அதிகரிக்கும்.

ALSO READ  திருப்பதியில் இரண்டு நாட்கள் மட்டும் சொர்க்க வாசல் திறப்பு

விவசாயிகள்

விளைச்சல் சுமாராக இருப்பதால் பொருளாதார நிலையும் சுமாராக தான் இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். உங்கள் அருகில் இருப்பவர்களிடம் பேசுவதில் நிதானம் தேவை. பூமி மனை போன்றவற்றால் சிறு சிறு செலவுகள் வந்து போகும்.

பெண்கள்

கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்தினரே உங்கள் மீது வீண் செலவுகளையும் ,பிரச்சினைகளையும் உண்டாக்குவார்கள். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அனைத்து சூழ்நிலைகளையும் அனுசரித்து செல்வது நல்லது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாசி மாத பலன்கள்… எதையும் துணிச்சலுடன் செய்யும் மேஷ ராசிக்காரர்களே…

Admin

யோகிபாபுவுக்கு நடராஜன் வாழ்த்து !

naveen santhakumar

அமெரிக்காவை புரட்டிப்போட்ட ஐடா புயல்…!!

Admin