ஜோதிடம்

தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த தயாநிதிமாறன்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கடந்த மே 13-ம் தேதி அன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைக் கொடுக்கச் திமுக எம்.பிக்கள். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சென்றனர். 

இந்தச் சந்திப்பின் போது தங்களை தலைமைச் செயலாளர் அவமானப்படுத்தி விட்டதாக திமுக எம்.பிக்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தனர்.

முதலில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு நடந்தவற்றை விவரித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார்:-

அப்போது “This is the problem with you people” என்று தலைமைச் செயலாளர் எங்களைப் பார்த்துச் சொன்னார். இதற்கு என்ன அர்த்தம் தயா என்று தயாநிதி மாறனிடம் கேட்டார்.

அடுத்து பேசிய தயாநிதிமாறன்-

மூன்றாம் தர மக்களாக, வாயில் சொல்ல முடியாத, அதாவது உங்களைப் போன்ற ஆட்களை போன்று எங்களையும் கூறுகிறார். அதாவது தாழ்த்தப்பட்ட ஆட்களை போல நடத்துகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்கள் அதை கவனிக்காமல் அவரது அறையில் தொலைக்காட்சிப் பெட்டி அலறுகிறது. தொலைக்காட்சி சத்தத்தை கூட அவர் குறைத்து வைக்கவில்லை. எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் நடந்துகொண்டார்.

ALSO READ  முதலில் பிரதமர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்; திமுக எம்.பி தயாநிதி மாறன் !
தலைமை செயலாளர்.

ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்திருக்கிறார். அந்த பொறாமையின் உச்சத்தில் இருந்துள்ளார் தலைமைச் செயலாளர். அந்த பொறாமை முதல்வருக்கு இருக்கிறதோ? இல்லையோ? தலைமைச் செயலாளருக்கு இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. நாங்கள் எடுத்துச்சென்ற கோரிக்கைகள் எங்களுக்கானது அல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கானது. திமுகவை சேர்ந்தவர்களுக்கானது அல்ல. அனைத்துக் கட்சி சார்ந்தவர்களுக்கும், கட்சி சார்பு இல்லாதவர்களுக்குமானது. தேவையான கோரிக்கைகளை முன்வைத்தோம். ஒரு லட்சம் தொழிற்சாலைகளை திறக்க வேண்டும். பேருந்து வசதி விடவேண்டும். ரயில் சேவையை தொடர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். 

அரசாங்கம் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து விட்டோம். இதுபோன்ற சிறு உதவிகளையாவது நீங்கள் செய்யுங்கள் என அவரிடம் கோரிக்கை வைக்க சென்றோம். ஆனால் சண்முகம் எங்களை கீழ்த்தரமாக நடத்தினார் என தயாநிதிமாறன் குற்றம்சாட்டினார். 

ALSO READ  2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக சோனியா காந்தி அழைப்பு


திமுக எம்பி தயாநிதி மாறன் ‘நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா’ என்று கேள்வி எழுப்பியதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்:-

இதனிடையை இவ்விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன் வருத்தம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

13.05.20 தமிழக அரசின் தலைமைச்செயலாளரைச் சந்தித்தது குறித்து நான் அளித்த பேட்டியின் போது, தலைமைச் செயலாளர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில் தான் கூறியிருந்தேனே தவிர எவருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்குச் சிறிதும் இல்லை. யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா குமாராக வருகிறார் ‘சுமார் மூஞ்சி குமார்’… 

naveen santhakumar

7 பேரின் உடலில் இருக்கும் இளைஞர்… நெகிழும் பெற்றோர்

Admin

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் என்னென்ன? முதல்வர் அறிவிப்பு…

naveen santhakumar