ஜோதிடம்

வினை தீர்க்கும் விநாயகரை வழிபடும் முறை!!… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வழிபட்டு ஆரம்பிக்க வேண்டும் என்பர். ‘பிள்ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவேதான் ‘மூல கணபதி’ என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.

அதனால் தான் எந்த ஒரு பூஜை செய்ய தொடங்கும் முன்பு மஞ்சளில் விநாயகர் பிடித்து வணங்கி அவரை வழிப்பட்ட பின் தான் பூஜை தொடங்குவர்.

‘வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் பெரியோர்கள். நமது வாழ்வு மட்டுமல்ல; நம் சந்ததியினரின் வாழ்க்கைச் செழிக்கவும் விநாயகர் வழிபாடு அருள் செய்யும்.

ALSO READ  தலையில் குத்திய கத்தி… ரத்தம் வழிய வீதிகளில் சுற்றிய நபர்…

விநாயகரை வழிபடும் முறை:-

முக்காலத்துக்கும் வழிகாட்டுபவர் விநாயகர், தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாத தெய்வம், கணங்களுகெல்லாம் அதிபதி, நாம் செய்யும் நற்காரியங்கள் அனைத்துக்கும் அவரே ஆதாரம். அவரை வழிபடுவதால் சுகம், ஞானம், ஆனந்தம் என அனைத்தும் வாய்க்கும்.

கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை ‘கணபதி’ என்று சொல்கின்றோம். எனவே, நாம் ‘தேவ’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், ‘மனித’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், ‘அசுர’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.

அதேபோல் விநாயகரை வழிபடும் போது மிகவும் பணிவுடன் உடலைச் சாய்த்து நின்று வணங்க வேண்டும். பின் வலது காதை இடது கையாலும், இடது காதை வலது கையாலும் பிடித்து மூன்று முறை தோப்புக் கரணம் போட வேண்டும்.

ALSO READ  நாசா அதிரடி போட்டி அறிவிப்பு - பரிசு வெல்ல நீங்கள் ரெடியா..???

இதனை தொடர்ந்து விநாயகர் உகந்த அருகம்புல்லை அவருக்கு மாலையாக அணிவித்து, நெய்தீபம் ஏற்றி, பின் அவரை மூன்று முறை வலம் வர வேண்டும்.

மேலும் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து நமது தீவினைகளை சிதறச் செய்ய வேண்டுமென பணிவாக கேட்க வேண்டும். 

அகவே, எந்த நல்ல காரியத்தை தொடங்குவதற்கு 21 நாட்களுக்கு முன்பு விநாயகரை வழிபாடு செய்தால் வெற்றி நிச்சயம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விரைவில் இந்தியாவில் நத்திங் இயர் 1 இயர்பட்ஸ் அறிமுகம் :

Shobika

தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த தயாநிதிமாறன்…

naveen santhakumar

திருப்பதியில் இரண்டு நாட்கள் மட்டும் சொர்க்க வாசல் திறப்பு

Admin