சினிமா

அவதார் 2 படத்தின் First Look வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அவதார் படத்தின் தொடர்ச்சியான “அவதார் 2” வின் First Lookயை வெளியிட்டுள்ளார்.

2021-ல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் எனத் தெரிகிறது. 2009ம் ஆண்டில் அவதார் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அதன் இரண்டாம் பாகம் 2013-ம் ஆண்டில் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். ஆனால், பல டெக்னிக்கல் சிக்கல்களால் அவதார் 2 படம் வெளியாக வில்லை.

ALSO READ  'காத்து வாக்குல ரெண்டு காதல்'படப்பிடிப்பில் இணைந்தார் நடிகை சமந்தா 

அவதார் படத்தில் பூமியில் இருந்து பேண்டோரா எனும் வேற்று கிரகத்துக்கு மனிதர்கள் விண்கலம் ஏறி செல்வார்கள். பேண்டோராவின் அழகை தனித்துவமாக படம்பிடித்து உலகிற்கு வியப்புடன் கலந்த பிரம்மாண்ட படைப்பை ஜேம்ஸ் கேமரூன் காட்டியிருந்தார்.

அவதார் 2 மற்றும் அடுத்தடுத்த பாகங்களில் பேண்டோராவை தாண்டிய பல புதிய உலகங்களை உலக ரசிகர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் காட்டவுள்ளார் என கூறப்படுகிறது.

ALSO READ  விஜய் பட நடிகர் காலமானார் !

நீண்ட கால தயாரிப்பில் இருக்கும் அவதார் 2 இன்னும் ஒருவருடம் தள்ளிப்போய் 2021 டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க தயார் : ராதிகா சரத்குமார்

Admin

வாடிவாசலில் சீறிப்பாயும் நடிகர் சூர்யா

Admin

வைரலாகும் திரிஷாவின் மிஸ் சென்னை பட்டம் பெற்ற புகைப்படம்:

naveen santhakumar