சினிமா

திரையுலக அஜித் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2015-ம் ஆண்டு அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடித்து வெற்றியடைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் அனிகா சுரேந்தர்.

இதில் அஜித்துக்கு மகளாக நடித்து இருந்தார் அனிகா. இதனை தொடர்ந்து விஸ்வாசம் படத்திலும் அப்பா – மகளாக இருவரும் நடித்தனர். தற்போது அஜித் மகள் என்றே திரை உலகில் வலம் வருகிறார் அனிகா.

மலையாள மொழியில் பத்துக்கும் மேற்பட்ட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதுவும் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். நடிகை அனிகா மலையாளம், தமிழ் என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்களிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிக ஆதரவை பெற்று வருகிறார்.

ALSO READ  மஹாராஷ்ட்ரா கிராம மக்களுக்கு உதவி வரும் நடிகர் சல்மான் கான்...

அவ்வப்போது Photo shootகளும் நடத்தி புகைப்படங்களை வெளியிடுகிறார்.

மேலும், அனிகா மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ‘குயின்’என்ற வெப் சீரிஸில் சிறு வயது ஜெயலலிதாவாக நடித்து உள்ளார்.

ALSO READ  எனக்கு உலகிலேயே சிறந்த நடிகை ஆகணும் : அமலாபால் ஓபன் டாக்

தற்போது வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் அனிகா அஜித்தின் மகளாக நடித்து வருகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இதையடுத்து அனிகா தான் நடித்த படம் ஒன்றுக்காக விருது வாங்கி உள்ளார். அந்த விருதுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இயக்குநர் சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய மகனா?… என்ன செஞ்சியிருக்கார் பாருங்க!

naveen santhakumar

ரம்ஜானை குறிவைக்கும் சிவகார்த்திகேயன்; ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு !

News Editor

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவி…

naveen santhakumar