சினிமா

ரம்ஜானை குறிவைக்கும் சிவகார்த்திகேயன்; ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றி பெற்று நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். 

ALSO READ  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கெளதம் கார்த்தி !

இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் மார்ச் 26-ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது. எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் டாக்டர் படம் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என படக்குழு படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அருள்நிதி படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்” போஸ்டர் வெளியீடு !

News Editor

வெற்றி பட இயக்குனருடன் இரண்டாவது முறையாக இணையும் ஜி.வி பிரகாஷ்..! 

News Editor

ஆபாச கேள்விக்கு பதிலளித்த நடிகை நீலிமா ராணி…!

News Editor