சினிமா

ஹாலிவுட்டை கலக்கிய ஆஸ்கர் திருவிழா.. எந்த படம் டாப் தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லாஸ் ஏஞ்சல்ஸ்:-

92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

இதில், டாம் பிலிப்ஸ் இயக்கிய ஜோக்கர், டிகாப்ரியோ மற்றும் பிராட் பிட் இணைந்து நடித்த ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’, சாம் மெண்டிஸ் இயக்கிய 1917 மற்றும் ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி (Ford Vs Ferrari) உள்ளிட்ட படங்கள் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருந்தன.

குறிப்பாக, சாம் மெண்டிஸ் இயக்கிய ‘1917’ படம், சிறந்த இயக்குநர்; சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைக் குவிக்கும் என்று பல்வேறு சினிமா விமர்சகர்கள் கணித்திருந்தனர்.

ஆனால், அவர்கள் அனைவரது கணிப்புக்களையும் பொய்யாக்கி பாங்க் ஜூன் ஹோ (Bong Joon-Ho) இயக்கிய தென்கொரியத் படமான ‘பாராசைட்’ சிறந்த படம், திரைக்கதை, இயக்கம் மற்றும் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என மொத்தம் 4 விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறது

அதேபோல், ஜோக்கர் திரைப்படத்துக்காக ‘வாக்கீன் பீனிக்ஸ்’ (Joaquin Phoenix) சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார்.

ALSO READ  கெளதம் மேனன், செல்வராகவன் வரிசையில் இணைந்த பிரபல இயக்குனர்!

பீனிக்ஸ் 4-வது முறையாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் முதன்முறையாக வென்றுள்ளார்.

ஆஸ்கர் விருது வென்றவர்கள் முழுப் பட்டியல்
இதுதான்:-

சிறந்த படம் – பாராசைட் (Parasite)

சிறந்த இயக்குநர் – பாங்க் ஜூன் ஹோ (Parasite)

சிறந்த நடிகர் – வாக்கீன் பீனிக்ஸ் (Joker)

சிறந்த நடிகை – ரெனி ஜெல்வெகர் (Judy)

சிறந்த துணை நடிகர் – பிராட் பிட் (Once Upon A Time In Hollywood)

சிறந்த துணை நடிகை – லாரன் டெர்ன் (Marriage Story)

சிறந்த திரைக்கதை – பாங்க் ஜூன் ஹோ மற்றும் ஹான் ஜின் (பாராசைட்).

சிறந்த ஒளிப்பதிவு (cinematography) – 1917

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் – Bombshell

சிறந்த ஆடை வடிவமைப்பு – Little Women

சிறந்த படத்தொகுப்பு (Editing) – Ford vs Ferrari

ALSO READ  ஆஸ்கார் வாங்கிய திரைப்படம் விஜய் படத்தின் காப்பியா?

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (vfx) – 1917

சிறந்த பாடல் – (I’m Gonna) Love Me Again from Rocketman

சிறந்த ஒலி தொகுப்பு – Ford vs Ferrari

சிறந்த ஒலிக்கலவை (Sound mixing) – 1917

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – Once Upon A Time In Hollywood

சிறந்த தழுவல் திரைக்கதை – டைகா வைட்டி ( Jojo Rabbit).

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் – Parasite (தென்கொரியா)
.

சிறந்த ஆவணப்படம் – American Factory.

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – Toy Story 4.

சிறந்த ஆவண குறும்படம் – Learning To Skateboard In A Warzone (If You’re a Girl)

சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் – The Neighbors’ Window

சிறந்த அனிமேஷன் குறும்படம் – Hair Love

சிறந்த பின்னணி இசை – Joker


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிகரெட், சரக்கு பாட்டில், தமிழ் ராக்கர்ஸ் … வைரலாகும் பிரேம்ஜியின் புகைப்படம்…!

naveen santhakumar

பிக்பாஸ் சீசன் 5ல் பிரியங்கா தேஷ்பாண்டே?

News Editor

வனிதாவுக்கே டஃப் கொடுப்பாரோ??????

naveen santhakumar