சினிமா

அருள்நிதி படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்” போஸ்டர் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர்போனவர் நடிகர் அருள்நிதி. இவர் வம்சம், டிமாண்டி காலனி, மௌனகுரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், போன்ற மாறுபட்ட கதைக்களத்தில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அண்மையில் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் வெளியான “களத்தில் சந்திப்போம்” படம் மாபெரும் வரவேற்பினை பெற்று திரையரங்கில் ஓடிகொண்டியிருக்கிறது. 

ALSO READ  ஜல்லிக்கட்டு உயர்பலியை தடுக்க யோசனை வழங்கிய அரவித்சாமி!

இந்நிலையில் நடிகர் அருள்நிதியின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் அறிமுக இயக்குனர் இன்னிசை பாண்டியன் இயக்கும் “டைரி” என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கவுள்ளார். இயக்குனர் இன்னிசை பாண்டியன் “டிமாண்டி காலனி” படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக இருந்துள்ளார்.  மேலும் அஜய் ஞானமுத்துவின் முதல் படமான டிமாண்டி காலனியில் அருள்நிதியை நடித்திருந்தார். அதுபோலவே அவரின் உதவி இயக்குனரான இன்னிசை பாண்டியனின் முதல்படத்திலும் அருள்நிதி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் அப்டேட்டை படக்குழு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், டைரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.  

ALSO READ  பொதுத்தேர்தல் அட்டவணைக்கு பிறகு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு : அமைச்சர் செங்கோட்டையன் 

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘சூரரைப்போற்று’ :

Shobika

அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு  பால்கே விருது…!

News Editor

முதல் சர்வதேச விருது….குதூகலத்தில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா….!!!

Shobika