சினிமா

வெளியாகியது ‘சுல்தான்’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த ரெமோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தினை நடிகர் கார்த்தியை வைத்து “சுல்தான்” என்ற புதிய படத்தினை இயக்கி வருகிறார்.

ALSO READ  விருதுநகரில் பரபரப்பு; காய்ச்சலால் பெண் காவலர் மரணம் !

இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அவரை தொடர்ந்து யோகி பாபு, பொன்னப்பாலம் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கார்த்தியின் 19 வது படமாக உருவாகும் இப்படத்தினை எஸ்.ஆர் பிரபு தயாரிக்கிறார்.  

இதன் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், மீண்டும் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பு பணிகள் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில், இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ALSO READ  மாற்றுத்திறனாளிகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகை

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில், “கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் சுல்தான் பாடத்தின் டீசர் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும்” என குறிப்பிட்டுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிக பொருட்ச்செலவில் தயாராகும் வைபவ் திரைப்படம் !

News Editor

பாடகர் மீது அமலாபால் அவதூறு வழக்கு…..இவர்தான் இரண்டாவது கணவரா??????

naveen santhakumar

சர்ச்சையில் சிக்கிய சோனுசூட்….!!!

Shobika